ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தல் விழிப்புணர்வை முன்னிட்டு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான செந்தில்ராஜ் உத்தரவின் படியும் தொகுதி தேர்தல் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான ஜீவரேகா ஆலோசனையின் பேரிலும்
ஸ்ரீவைகுண்டம் தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்டிட தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் “நம்ம ஸ்ரீவை செல்பி பாயிண்ட்” என நூதன முறையில் பொதுமக்களை கவரும் வகையில் ஸ்ரீவைகுண்டத்தின் பழமை வாய்ந்த கள்ளபிரான் கோயில், சிஎஸ்ஐ ஆலயம், பள்ளிவாசல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை பகுதிகளின் அழகிய தோற்றங்களை கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மக்களை கவரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட டிஜிட்டல் போர்டு புதுக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தின் ஒட்டு மொத்த அழகையும் ஒரே இடத்தில் நின்று செல்ஃபி எடுத்து தேர்தல் விழிப்புணர்வைவும் மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்டில் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


