செய்துங்கநல்லூரில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தமிழ்நாடு ஊரக மாநில வாழ்வாரத இயக்கம் சார்பாக செய்துங்கநல்லூரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க கருங்குளம் வட்டார மேலாளர் மல்லிகா தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கிலெட்சுமி, பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, செய்துங்நல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பேரணியில் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், வாழ்வாதார வட்டார ஒருங்கிணைப்பாளர் கிரேஸ், பேச்சித்தாய், வசந்தி, சுடலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சுயஉதவிக்குழு பெண்கள் சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது குறித்த விளக்கும் வகையில் கோலமிட்டிருந்தனர்.


