
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம் மகளிர் தினவிழா கொண்டாப்பட்டது. இந்த விழாவிற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சமூக நலத்திட்ட தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண் பணியாளர்கள் அனைவரும் ஒரே சீருடையில் விழாவில் பங்கேற்று, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பெரிய கேக்கை வெட்டி இனிப்புகள் வழங்கினர்.
விழாவில் பங்கேற்ற வருவாய்த்துறையினர் அனைவரும் பெண் பணியாளர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.