வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில் கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியல் உலக மக்கள தொகை தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள் தலைமை வகித்தார். வட்டார சுகாதர மேற்பார்வையாளர் பெரியசாமி வரவேற்றார். மாணவ மாணவிகளிடம் பேச்சுபோட்டி நடந்தது. முதல் இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு டாக்டர் அஸ்வனி ஜெனிபர் பரிசு வழங்கினார். மருத்துவமில்லா மேற்பார்வையாளர் இளங்கோ ராஜன் ,பகுதி சுகாதர செவிலியர் ராமலெட்சுமி, கிராம சுகாதர செவியர் நசீம் பானு ஆகியோர் பேசினார். மக்கள் தொகை உறுதி மொழி எடுக்கப்பட்டது. சுகாதர ஆய்வாளர் வைகுண்டத்தான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வல்ல நாடு சுகாதர ஆய்வாளர் சாகீர் செய்திருந்தார்.


