
ஆழ்வார் திருநகரி நூலகமும் தென்காசி ஆகாஸ் பிரண்ட்ஸ் அகடமியும் இணைந்து இந்து மேல்நிலைப்பளியில் டி.என். பி எஸ். சி.குருப் 4 மாதிரி தேர்வு நடத்தியது. இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நம்பி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற டி .சி. டபூள்யூ துணை மேலாளர் ஜேஷகிரி முன்னிலை வகித்தார். ஆனந்த புரம் பள்ளி ஆசிரியர் அருள் ராஜ வரவேற்றார். கிராம நிர்வாக அதிகாரி ஜெனிபர் தேர்வுக்கு தயாராகும் முறைப்பற்றி விளக்கினார். மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நூலகர் சம்சுதீன் நன்றி கூறினார்.