தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இருந்து வரும் கொரோனாவுக்கான ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. கொரோனா, ஒமைக்கிரான் பரவல் குறித்த தகவல், தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்க செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டார்கள். அவர்களின் முடிவின்படி ஜனவரி 10ம் தேதிவரை ஊரடங்கை நீட்டப்பது, 50 சதவீதம் ரயில், உணவங்கள், பூங்காக்கள், திரையரங்கு,சலூன் கடை, பேருந்துகளில் இருக்கை, 1 முதல் 8 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு10 ம் தேதி வரை நேரடி வகுப்பிற்கு தடை, வழிபாட்டுத்தளங்கள் ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடரும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


