என்.பி.என்.கே நண்பர்கள் மன்றத்தின் 3ம் ஆண்டு தே விருது வழங்கும் விழா வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் நடைபெற்றது. ஒருகிணைந்த நெல்லை மாவட்டத்தில் சாதனை படைத்த 10 பல்துறை ஆளுமைகளுக்கும் 6 பேருக்கு கவுரவ விருதுகளும் வழங்கப்பட்டன. நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு விருதுகனை வழங்கி சிறப்பித்த¬£ர். எழுத்தாளர் நாறும்பூநாதன், முத்தாலங்குறிச்சி காமராசு, கவிஞர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் விருதுபெற்றவர்களுக்கு அகமகிழ் கலைகூடகலை இயக்குநர் நெல்லை லெனின் தயாரித்த பிரேத்தியேகமான விருதுகள் வழங்கப்பட்டன.இந்த விழாவில் விருது பெற்றவர்களின் பட்டியல் வருமாறு ஆச்சரிய அரசுத்துறை அதிகாரி விருது&நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி. சிறந்த ஊடகவியலாளர்&முப்பிடாதி .சிறந்த வில்வித்தை வீரர் விருது மும்மது பரூக் , சிறந்த சூழலியலாளர் விருது ரமேஷ்வரன்,சிறந்த சமூக சேவை நாயகன் விருது மாநாகராட்சி ஆதரவற்றோர் இல்லங்களின் ஒருங்கிணைப்பாளர் சரவணன். சாதனை கலைஞன் விருது ஓவியர் பத்தடை கணேசன். சிறந்த அறிவியல் சிந்த¬யாளர் விருது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்ககழக பேராசிரியர் சுதாகர், நம்பிக்கை நாயகன் விருது வரலாற்று ஆர்வலர் சிவகளை மாணிக்கம், இளம் சாதனையாளர் விருது அரோரா சமூக அறக்கட்டளையின் திவ்ய பாரதி, சமூக நல மாற்றத்திற்கான குழு விருது நெல்லை அனிமல் சேவர்ஸ் குழுவினர், சிறந்த சூழலியல் நண்பன் விருது பக்கீர் முகம்மது லெப்பை, சிறந்த தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் விருது மிதார் முகைதீன், மக்களின் நண்பர்கள் அமைப்பு தூத்துக்குடி காவல துணை கண்பாணப்ளார் பி. இளங்கோவன். கனவு ஆசிரியர் விருது நாசரேத் பண்டாரம் பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் விழாவிற்கான ஏற்பாடுகளை நல்லதைப்பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்ற ஒருங்கிணைப்பளார் மு.வெ. ரா. நிர்வாக குழுஉறுப்பினர்கள் சுரேஷ் , சிவ நட்ராஜ், நேரு யுவகேந்திரா சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.