செய்துங்கநல்லூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் அமைந்துள்ளது சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சிவகாமி அம்பாள் மற்றும் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு மேல் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக சந்தனம், இளநீர், பால், திரவியம் உள்பட பல்வேறு வித பொருட்களில் அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரம் தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


