குரும்பூர் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
குரும்பூர் அருகே உள்ள முத்துமாலைவிளையில் இளைஞரணி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
ஊர் தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். செயலாளர் கோகுல் முன்னிலை வகித்தார். பொருளாளர் சிவா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட த.வெ.க. ஒன்றிய செயலாளர் நீதிபாலன், இணை செயலாளர் கார்த்திக், கிளை செயலாளர்கள் ஆட்டோ கண்ணன், செல்வக்குமார், முத்துமாலைவிளை இளைஞரணி செயலாளர் ரத்தினகுமார் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் த.வெ.க., ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாலமன், முத்துமாலைவிளை இளைஞரணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


