ஊட்டியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான சிலம்பப் போட்டியில் ஒற்றைச் சிலம்ப பிரிவில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் முத லிடம் பிடித்துள்ளார்.
தென் மண்டல அளவிலான சிலம்பப் போட்டிகள், உலக சிலம்ப தற்காப்புக்கலை சங்கம் சார்பில் ஊட்டியில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட் டன.அதில்,12 வயதிற்கு உட்பட்டோ ருக்கான பிரிவில், ஒற்றைச் சிலம்ப போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் சித்தார்த் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பெற்ற மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், நாசரேத் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் கராத்தே மாஸ்டர் டென்னிசன், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி ஆசிரியர் தனபால், என்.சி.சி.அலுவலர் சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவரை பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட் டினர்


