
தெற்கு காரசேரியில் இல்லந்தேடி கல்வி கலை நிகழ்ச்சி நடந்தது. தெற்கு காரசேரி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்குக் கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஐயப்பன் குழுவினர் குழு நாடகம், தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.