தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடியில் 3வது மைலில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாநகர திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் பகுதி செயலாளர் பி பி ராமகிருஷ்ணன் சுரேஷ்குமார் மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன் மாநகர அயலகஅணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ் மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் குபேர் இளம்வழுதி, மாநில பேச்சாளர் சரத் பாலா தொண்டரணி அமைப்பாளர் முருகன் இசக்கி, கவுன்சிலர்கள் சரவணகுமார் பொன்னப்பன் இசக்கிராஜா, வட்ட செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வதுஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடி மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஏ.முருகன் ஏற்பாட்டில் தூத்துக்குடி 3ம்மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவசிலைக்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி , மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேவர் மகாசபை
தூத்துக்குடி மாவட்ட தேவர் மகாசபை சார்பில் தலைவர் சுடலைமணி தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயலாளர் பழனிச்சாமி பொருளாளர் அருள்ராஜ் புரவலர் பெருமாள் நிர்வாக குழு உறுப்பினர்கள் பொன் இசக்கி, முருகன், இசக்கி ராஜா, பேச்சிமுத்து,பாலா, மகாராஜன், ராஜபாண்டி, போஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்
தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கௌதம் பாண்டியன் அருண்குமார், சிவகாமி முருகன், வழக்கறிஞர் நிர்மல்சிங், மனோ பாண்டியன், வாசுதேவன், அருண் பிரகாஷ், ஆகாஷ் பாண்டியன்,மணிகண்டன் தீனதயாளன், அருள்ராஜ், அருண் பாலா, முனீஸ், மனோ பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம்
சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநகர இளைஞரணி செயலாளர் “பசும்பொன்” முருகன், மாநகர நிர்வாகி சண்முககுமார் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் முன்னிலையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் மாவட்டச் செயலாளர் டேனியல்ராஜ் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் துணைச் செயலாளர் வக்கீல் சிவசிங் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஜெய கசமாடன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ் மாநகர செயலாளர் முத்து செல்வம், கண்ணபிரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓபிஎஸ் அணி
ஓபிஎஸ் அணி சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஏசா துரை தலைமையில் தூத்துக்குடி 3வது மைலில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


