நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் பேட்டையில் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் காளிதாசன் தலைமை தாங்கிப் பேசினார். செயலாளர் ராஜகுமார், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமுதாய நலக்கூடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், மூலக்கரை சுபாஷ் பண்ணையார் ஆகியோர் திறந்து வைத்தனர். மணமக்கள் அறையை ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் திறந்து வைத்தார்.
விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. இந்தச் சமுதாய நலக்கூடம் நமது சமுதாய மக்கள் மட்டுமின்றி அனைத்துச் சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் கட்டியமைக்கப்பட்டுள்ளதாகச் செயலாளர் ராஜகுமார் கூறினார்.

விழாவில் தட்சணமாற நாடார் சங்கக் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராதாகிருஷ்ணன், நிர்வாக சபை உறுப்பினர்கள் செல்வன், பால்ராஜ், கோல்டன் செல்வராஜ், மாணிக்கவாசகம், ராமசுப்பு, ரகுநாதன், நயினார், ராகவன், சிவக்குமார், கருணாகரன், சுரேஷ், ராதாகிருஷ்ணன், செந்தமிழ் சேகர், அருள்மேயர், கோகலே, ஜெயக்கொடி, அந்தோணி மற்றும் ஆறுமுகம், ஆர்க் பில்டர்ஸ் உரிமையாளர் சிவக்குமார் தாஸ், முத்தாலங்குறிச்சி காமராஜ், பாரத் பெட்ரோலியம் டீலர் நாகராஜன், நிலக்கிழார் சீனிவாசன் மற்றும் சங்க ஆயுள்கால உறுப்பினர்கள், ஊழியர்கள், ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. மாசனமுத்து, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் கந்தசிவசுப்பு, உதயசூரியன், அலங்காரம், ராஜேந்திரன், கால்வாய் முத்துராமலிங்கம், பெருமாள், புதுக்குடி உலகு, வள்ளிமுத்து, பால்துரை, ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முத்துமாலை, சுப்பிரமணியன், சந்துரு, பொன்இசக்கி உள்பட அனைத்துச் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


