சூரியன் பண்பலையில் பேசினேன்
சூரியன் பண்பலையில் பாரம்பரிய தின விழாவை முன்னிட்டு நான் பேசிய சிறப்பு ஒலித்தொகுப்பு கடந்த வியாழக்கிழமை (19.11.2026) அன்று காலை 10 மணிக்கு ஒலிபரப்பானது. என்னிடம் கேள்விகளை எழுப்பி பதிலைப் பெற்ற அறிவிப்பாளர் திரு. கமலேஷ் அவர்களுக்கும், சூரியன் எஃப்.எம். நிர்வாகத்துக்கும் மிக்க நன்றி. நிகழ்ச்சியைக் கேட்ட பலர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அனைவருக்கும் நன்றி.
நீண்ட நாளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி ஒலிப்பதிவுக்கு சூரியன் எஃப்.எம். அலுவலகம் சென்றேன். மேலாளர் உள்பட அனைவரும் என்னை வரவேற்றனர். நான் பணியாற்றிய தினகரன் நாளிதழ் அலுவலகத்துக்கும் சென்றேன். என்னை மேலாளர், ஆசிரியர் மற்றும் என்னோடு பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் வரவேற்று மகிழ்ந்தனர். சந்தோஷமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக என்னை அறிமுகம் செய்த அறிவிப்பாளர் சகோதரி சரண்யா மற்றும் நல்ல புகைப்படம் எடுத்த தந்த என் ஆரம்ப கால நண்பர் ஆதிசங்கர் அவர்களுக்கும் எனது நன்றி.
– முத்தாலங்குறிச்சி காமராசு


