தூத்துக்குடி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் தினமும் இயக்க வேண்டும் வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் எம். பிரமநாயகம் அனுப்பியுள்ள மனுவில், “தூத்துக்குடி-சென்னை முத்துநகர் விரைவு ரயிலில் எப்போதும் நீண்ட காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இதைத் தவிர்க்க, தூத்துக்குடி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில்களைத் தினமும் இயக்க வேண்டும்.
ரயில் எண். 16765-16766 தூத்துக்குடி-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி விரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும். ரயில் எண். 22101-22102 மதுரை-லோகமான்ய திலக் விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


