தூத்துக்குடியில் கட்டுமான தொழிலாளர்கள் கூடும் இடங்களில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2ம் கேட் அருகே பத்திர காளியம்மன் கோவில் அருகே, மற்றும் சுகம் ஹோட்டல் அருகே கட்டுமான தொழிலாளர்கள் அதிகமானோர் கூடுகிறார்கள். அங்கிருந்து ஆண், பெண் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களுக்கு பணிக்கு செல்கின்றனர்.
அவர்களுக்கு கழிப்பிட வசதி என்பது இல்லாமல் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்தப் பகுதியில் கழிப்பிட வசதியை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு சார்பில் அழகு பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் எம்எஸ் முத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், மற்றும் ராமமூர்த்தி, காசி, சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், இனிதா, கிஷோர், மனோகரன், நாகராஜ், பெருமாள், முத்து சிற்பி தாமோதரன், கந்தசாமி, பெருமாள், ராம்குமார் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


