1876ஆம் ஆண்டு ஜாகர் (Dr. Jagor) என்ற ஜெர்மன் நாட்டுப் பொறியாளர் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர் தான் முதன் முதலில் ஆதிச்சநல்லூரைப் பற்றிய தகவல்களை வெளிக் கொணர்ந்தார். கடந்த 147 வருடங்களாக அகழ்வாய்வுகள் இங்கு நடந்துவருகிறது.
நேற்றைய தினம் ஆதிச்சநல்லூரில் பயனுள்ளதாக சென்றது. ஆசை ஆசையாக இந்த அகழாய்வைப் பல முறை சென்று பார்த்து வந்த அனுபவத்தை வைத்துக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடத் தைரியம் வருகிறது.

1. அவை ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3600 வருடத்திற்கும் பழமையானது. இதுவும் சிந்து சமவெளி மற்றும் மெசபட்டோமிய நாகரீகத்திற்கு இணையான காலத்திய தாக இருக்கும் என்பது என் நம்பிக்கை..இந்த நம்பிக்கைக்குக் காரணம் இங்குக் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்தான்.
2. தமிழக அகழாய்வு துறையினர் இந்த பகுதியில் ஒரு தமிழி எழுத்து கொண்ட பொருள் ஒன்று கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் பேசிய நம் முன்னோர்கள்தான் எனலாம்..

3. விவசாயம் செய்பவர்களின் உடலை மண்வெட்டி, கலப்பையில் உள்ள கொழு மற்றும் பன்னறுவாவுடன் தாழியில்வைத்து அடக்கம் செய்துள்ளனர். தச்சு வேலை செய்பவர்களை உளி மற்றும் அவர்கள் வேலை சார்ந்த பொருட்களுடன் தாழியில் புதைந்துள்ளனர். இரும்பு பொருட்கள் செய்தவர்களை வெட்டு இரும்பு போன்ற பொருட்களுடன் தாழியில் வைத்துள்ளனர். இவ்வாறு பல வேலை செய்தவர்களை அருகருகே நல்லடக்கம் செய்துள்ளனர்.
இவை பண்டைய நம் தமிழ் சமுகம்
சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர் என்பதைத்தான் விளக்குகிறது.
4. இவர்கள் விவசாயம் செய்து நெல் மற்றும் பிற தானியங்களை உற்பத்தி செய்து செழித்து வாழ்ந்துள்ளனர்.
5. செல்வந்தர்களுக்கு மீட்கப் பெரிய தாழியும் எளியோருக்குச் சிறிய தாழியும் என நல்லடக்கம் நடந்துள்ளது.. ஆக ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு அன்று இருந்துள்ளது. இந்த பாகுபாடு தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
6. இங்கு மிகப்பெரிய இரும்பு வாள் மற்றும் விவசாயத்தின் அடிப்படையான கொழு கிடைக்கிறது. இதனை எல்லாம் பார்க்கும் போது இரும்பு உருக்குதல் தமிழர்களுக்கு 4500 வருடங்களுக்கு மேல் பரிச்சயமானது என யூகிக்க முடிகிறது.
கிருஷ்ணகிரி அருகே மயிலாடும் பாறையில் 4200 வருட வாள் ஒன்றைக் கண்டறிந்துள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.

7. அறிவு மற்றும் தொழில் நுட்பத்தில் இவர்களுக்கு நிகர் இவர்களே. இரும்பிலான ஒரு பெரிய ஈட்டியைச் செய்துள்ளனர். அதற்கு ஒரு கைப்பிடியும் உள்ளது. அதனைப் பிடித்து இயக்கினால் ஈட்டியின் நீளத்தை சில அடி தூரம் நீட்டமுடியும். அதாவது இதனைக் கொண்டு எதிர்பாராத வகையில் எதிரியையோ அல்லது விலங்குகளையோ நிலைகுலையச் செய்ய முடியும்! இது இப்போது கிடைக்கும் பட்டன் கத்தி போன்ற தொழில்நுட்பத்திற்கு நிகரானது!!!
8.. வெங்கலத்தில் மான், நீர்க் கோழி, ஆடு மற்றும் பல உயிரினங்கள் ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்றது. இவை விளக்குவது யாதெனில் பல தரப்பட்ட உலோகத்தைப் பற்றி அறிவு இதற்கு அப்போதே இருந்துள்ளது. முப்பாட்டர்கள் இதனை ஒன்றிணைந்து நம் சிலை வடிப்பதில் கில்லாடிகளாக இருந்துள்ளனர் !

9. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். அவைகளைப் பார்க்கும் போது மனம் ஆனந்தத்தில் குதியாய் குதிக்கிறது. அந்த காலத்திலேயே அவர்கள் இராஜ போக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதை மனத்திரையில் பார்க்க முடிகிறது..
10. இறந்த தன் உறவினர் மேல் மண் பட அவர்கள் மனம் ஒப்பவில்லை. கடும் உழைப்பு மற்றும் சிறுத்தையுடன் பெரிய தாழிகள் செய்து பாறையை குடைந்து நல்லடக்கம் செய்துள்ளனர்.
11. தங்கத்துடன் சுமார் 20 விழுக்காடு வெள்ளி கலந்து மெல்லிய தகடுகளைச் செய்து பட்டமாகச் செய்துள்ளனர். செம்பு சேர்த்தால் மதிப்பு குறைவு என எண்ணி தங்கத்தில் வெள்ளியைச் சேர்த்தார்களோ எனப் பிரமிக்க வைக்கிறது. இந்த பட்டத்தைக் கசக்கி இறந்த உடலைக் கொண்ட தாழியில் எறிந்துள்ளனர். இதனைப் பார்க்கும் போது தங்கத்தகடு போல் மெருகேற்றிய நீ இன்று இப்படித் துவண்டு கசங்கிக் கிடைக்கிறாயே என இறந்த உடலைப் பார்த்து சொலவது போல் இருந்தது.

12. அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். காரணம் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன்தான் உடலை நல்லடக்கம் செய்துள்ளனர். இதனை அவர்கள் அடுத்த பிறவியில் பயன் படுத்துவார்கள் என நம்பியுள்ளனர். அதனால்தான் இவ்வாறு இறந்தவர்களின் உடலுடன் அவர்கள் பயன் படுத்திய பொருட்களையும் சேர்த்து அடக்கம் செய்துள்ளனர் என்பது என் நம்பிக்கை
13. காரம் சற்று தூக்கலாகச் செய்த மீன் குழம்பு சுவையில் தலைசிறந்தது. மேலும் மீனில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலம் மூளையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று. நம் முன்னோர்கள் மீன் பிடித்துச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார். அதற்குச் சான்றாக வெங்கலத்திலான ஒரு தூண்டில் முள் இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளது !

தூண்டில் முள் ஒரு சிறந்த தொழில் நுட்பம். மாட்டிய மீன் தப்பாமல் இருக்க இந்த முள்ளின் நுனி பிளவு பட்டு கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்பும் இந்த பழமையான தூண்டில் முள்ளிலிருந்த அடையாளம் உள்ளது. தூண்டில் முள்ளின் வடிவமும் அதன் நுட்பமும் கடந்த 3600 ஆண்டுகளாக அப்படியேதான் உள்ளது ! இதனை நினைத்துப் பார்க்க வியப்பாக உள்ளது. தமிழகத்தில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
14. கத்திக்கு ஒரு கைப்பிடி அவசியம். அந்த கைபிடியைத் தரமான மரத்தினால் செய்துள்ளனர். அந்த மரக் கைப்பிடியுடன் உள்ள கத்தி நம் முன்னோர்களின் கூர்மையான தொழில்நுட்பத்தினை படமிட்டுக் காட்டியது.



