தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (29.07.2024) நடைபெற்றது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் சமுதாய தொழிற்திறன் பள்ளிகளில் கொத்தனார் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெறும் நோக்கில் அவர்களது திறன்களை ஆய்வு செய்து கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குகின்றது.
இச்சான்றிதழ் பெறும் பயனாளிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுநர்களாகவும், அரசு துறைகளில் மானிய உதவி பெற்று தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளும், உயர்கல்வி பெறுவதற்கு அடிப்படையாகவும் அமைகின்றது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் வாயிலாக விபத்தினால் இறப்பு, கை அல்லது கால் இழப்பு, இரு கண் பார்வை இழப்பு மற்றும் முழுமையான செயல் இழப்பு, நிரந்தர குறைபாடு தவிர்த்து மருத்துவ செலவினம், ஆல்பா படுக்கை ஆகியவற்றிக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளியின் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்தி உதவித்தொகை, 10ம் வகுப்பு பயிலும் மகள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன், பயிலும் மகள், 11ம் வகுப்பு மற்றும் அதற்கு சமமாக பயிலும் மகள், 12ம் வகுப்பு மற்றும் அதற்கு சமமாக பயிலும் மகள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் மற்றும் மகள், இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வரும் மகன் மற்றும் மகள், இளங்கலை பட்டப்படிப்பு விடுதியில் தங்கி பயிலும் மகன் மற்றும் மகள், முதுகலை பட்டப்படிப்பு விடுதியில் தங்கி பயிலும் மகன் மற்றும் மகள், சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல் அல்லது அதற்கு இணையான தொழிற்கல்வி படிப்பு பயிலும் மகன் மற்றும் மகள், விடுதியில் தங்கி பயிலும் மகன் மற்றும் மகள், தொழிற்கல்வி மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மகன் மற்றும் மகள், தொழிற்கல்வி மற்றும் பட்ட மேற்படிப்பு விடுதியில் தங்கி பயிலும் மகன் மற்றும் மகள், தொழிற்பயிற்சி நிலையம் அல்லது தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மகன் மற்றும் மகள், விடுதியில் தங்கி பயிலும் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் சமுதாய தொழில் திறன் பள்ளி பயிற்றுநருக்கான திறன் சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பங்கேற்று தேர்ச்சியடைந்த 6 பயிற்றுநருக்கான கொத்தனார் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் மற்றும் இரண்டு பயனாளிகளுக்கு இணை மானிய நிதி திட்டத்தின் கீழ் ஹோட்டல் மற்றும் மீன் வளர்த்தல் மற்றும் விற்பனை நிலையம் அமைக்க தலா ரூ.1 இலட்சம் காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் இயற்கை மரணம் உதவித்தொகை 22 நபர்களுக்கு ரூ.3,74,000, விபத்து மரணம் உதவித்தொகை 2 நபர்களுக்கு ரூ.4,00,000-, வங்கி கடன் மானியம் 10 நபர்களுக்கு ரூ.2,50,000- என மொத்தம் 34 நபர்களுக்கு ரூ.10,24,000-ஐ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 543 கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார். மேலும், 33 மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்விக்னேஷ்வரன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் தாமோதரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


