ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் சி.எம்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் ஜெயபால். இவரது தந்தையின் கல்லறை கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேல் பகுதியில் உள்ளது. தனது தந்தையின் நினைவு நாள் வருகின்ற காரணத்தினால் கல்லறையை புதுப்பித்து வெள்ளை அடிப்பதற்காக கருங்குளத்தைச் சேர்ந்த சுடலை என்பவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது தந்தை கல்லறை அருகே தாதன்குளத்தைச் சேர்ந்த ராஜா, வள்ளி மற்றும் கருங்குளத்தைச் சேர்ந்த இசக்கி தீரன் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது வேறு இடத்திற்கு சென்று மது அருந்துங்கள் என்று சந்தோஷ் ஜெயபால் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த சந்தோஷ் ஜெயபால் செய்துங்கநல்லூர் போலிசார் புகார் அளித்தார். பின்னர் அவரை உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசார் சந்தோஷ் ஜெயபாலை தாக்கிய மூவரையும் தேடி வருகின்றனர்.