ஆறாம்பண்ணையில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்புவிழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை பஞ்சாயத்தில் 17 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது.
இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் வட்டாரத்தலைவர் புங்கன், நயினார் உள்பட கட்சியினர், ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.