
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரசின் 137 வது தொடக்கவிழா கொண்டாடப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரசின் 137 வது தொடக்க விழா ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அதற்காக சட்டமன்ற அலுவலகம் முன்புள்ள கம்பத்தில் காங்கிரஸ் கொடியே ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் ஏற்றினார். அதன்பின்னர் அங்கு இருந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட பொருளாளர் எடிசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தலைவர் நல்லகண்ணு, ஆழ்வார்திருநகரி கோதண்டராமன், சாத்தான்குளம் சங்கர், கருங்குளம் புங்கன், ஸ்ரீவைகுண்டம் நகரச்செயலாளர் சித்திரை, காங்கிரஸ் நகரத்தலைவர் சதீஷ்குமார், துணைத்தலைவர் கண்ணன், ஊடகப்பிரிவு மரியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.