செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழதூதுகுழியில் சாலை பணியின் போது விவசாயிகள் பயன்படுத்தும் பாசன மடையை மூடிய காரணத்தினால் கடந்த 25ம் தேதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியை பார்வையிட இன்று சட்டமன்ற உறுப்பினர் நேரில் வருகை தந்தார். சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். மேலும் இதனை முறைப்படுத்தி பாசனமடையை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவருடன் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டாரத்தலைவர் புங்கன், சாத்தான்குளம் சங்கர், நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


