ஆழ்வார்திருநகரியில் ரூபாய் 15.29 லட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலக புதிய கட்டிட துவக்கவிழா நடந்தது.
ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரியில் கிராம நிர்வாக அலுவலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்ததுடன் நெல்லை திருச்செந்தூர் சாலை ஓரத்தில் இருந்ததால் மழைக்காலங்களில் மழைநீர் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் தேங்கியது.
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்த நிலையில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடத்தை முற்றிலுமாக இடித்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணி கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலம் அருகில் உள்ள தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனால் கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை புதிதாக கட்ட வேண்டும் என நிறுவ வேண்டும் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையின்படி ரூ.15.29 லட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலக புதிய கட்டிட துவக்கவிழா இன்று ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.
ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி புதிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஏரல் தாசில்தார் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


