தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள வெங்கடேஷ்வரா மகாலில் நடந்தது.
மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சபீர் தலைமை வகித்தார். மாநில செயலளர் அல் அமீன் பேசினார். மாவட்ட தாலைவர் அசாருதீன்,மாவட்ட செயலாளர் சுலை மான், மாவட்ட பொருளாளர் ரஷீத் காமில், துணை தலைவர் நாவஸ், துணை செயலாளர்கள் பரீத், இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்லவேண்டும். செய்துங்கநல்லூர் வழியாக சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்க வேண்டும். செய்துங்கநல்லூரில் மந்தமாக நடைபெறும் சாலை வேலை மிக வேகமாக நடைபெறவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஏராளமானபேர்கள் கலந்துகொண்டனர்.