செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் முதன்மைக கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பெல்சியா ஞானமணி ஆகியோரின் வழிநடத்துதலின் படி கருங்குளம் வட்டார வள மையம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
.
இதில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர் வட்டார ஒருங்கிணைப்பாளர் பேகம், ஆசிரியர் பயிற்றுநர் இராஜேந்திரன், சிவசங்கரி, வெயிலுமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிககான ஏற்பாடுகளை வட்டார வள மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜெயமேரி அற்புதம் செய்திருந்தார்.