சாத்தான்குளம் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி செய்து காப்பாற்றினார் சமூக ஆர்வலர் எஸ்ஜே கென்னடி
திருச்செந்தூரில்சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தனர்அப்போது பன்னம்பாறை கிராமத்தை தாண்டி சிறிய வளைவில் வரும் பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று நபர்கள் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரின் மீது மோதினர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் கீழே விழுந்தார் மோட்டார் சைக்கிள் பின்னாடி இருந்த இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர்.அப்போது அங்கே வந்த மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடிஉடனே சம்பவ இடத்தில் நின்று விபத்தில் சிக்கியவர்களை மயக்கத்திலிருந்து மீட்டு முதலுதவி செய்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிய வந்தவருக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்தது.பின்னாடி இருந்த இரு மாணவர்கள் மிகுந்த காயமுற்று இருந்தனர். மேலும் காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த முதியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. கென்னடி நாலு பேரையும் மீட்டு முதலுதவி செய்து 108க்கு தகவல் தெரிவித்து சாத்தான்குளம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும் சாத்தான்குளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கென்னடியின் சேவையை பாராட்டினார்.
Attachments area