தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகன பூங்கா உள்பட மொத்தம் 22 முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் தொழிற்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
முடிவைத்தானேந்தல் சிப்காட் பூங்கா: முடிவைத்தானேந்தல் பகுதியில் ரூ.5,000 கோடி முதலீட்டை ஈர்த்து, 20,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 2,570 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
ஆயத்த தொழிற்கூட வசதிகள்: தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடி மதிப்பில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூடங்கள் அமைக்கப்படும்.
விழுப்புரம் (ஓமந்தூர்): ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 3,200 வேலைவாய்ப்புகளுடன் 229 ஏக்கரில் தொழிற்பூங்கா.
நாமக்கல் (லத்துவாடி): ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 3,500 வேலைவாய்ப்புகளுடன் 245 ஏக்கரில் தொழிற்பூங்கா.
புதுக்கோட்டை (திரப்பிடாங்கி): ஆவுடையார்கோவில் வட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் ஆயத்த தொழிற்கூட வசதியுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா.
மழைக்கால நிவாரண உயர்வு: உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 23,000 குடும்பங்கள் பயனடைவர்.
வெற்றி மகளிர் திட்டம்: மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.500 கோடி கடனுடவி வழங்கப்பட்டு, 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சிவகாசி பைரோடெக்னிக்ஸ் மையம்: சிவகாசியில் பட்டாசு உற்பத்தியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ரூ.2 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
டிஜிட்டல் மனை ஒதுக்கீடு: சிப்காட் தொழிற்பூங்காக்களில் மனைகள் ஒதுக்கீட்டை 100% வெளிப்படைத்தன்மையுடன் மாற்றவும், முப்பரிமாணக் (3D) காட்சிப்படுத்தலை வழங்கவும் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.


