‘இந்தச் சதிக்கூட்டத்தில் போலீஸ் உளவாளிகள் யாராவது வந்து இருக்கிறார்களா?’ என்பதை ஆராய கூட்டத்தினரை எண்ணிப் பார்க்க முதலில் தீர்மானித்தனர். கொட்டங்காடு காசிநாடாரும், மந்திரமும் ஒவ்வொருவரின் முகத்தையும் நன்றாகப் பார்த்து பார்த்து ஒருபுறமாக ஒதுக்கினர், பின்பு ஆட்களை எண்ணிப் பார்த்தனர் மொத்தம் 67 பேர் இருந்தனர் பின்னர் 52 பேர் ராஜகோபால் தலைமையில் முள் வேலியைப் பிய்த்துக்கொண்டு உப்பளத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
மந்திரக்கோள் தலைமையில் 15 பேர் மெயின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவதற்காகச் சென்றனர். இவ்வாறு வீரர்கள் செல்லும்போது தாங்கள் கொண்டு வந்திருந்த வேல்கம்பு, வெட்டரிவாள், ஈட்டி, பெட்ரோல், காவலாளிகனைக் கட்டுவதற்குத் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கயிறு. உருட்டுக் கட்டைகள் போன்றவற்றையும் எடுத்துச்சென்றனர். இராஜகோபால் குரும்பூர் இரயில் நிலையத்தைத் தாக்கியதில் கைப்பற்றியத் துப்பாக்கியை வைத்திருந்தார். காசிராஜன் ஆறுமுகநேரியில் இருந்து வரும் போதே கொண்டு வந்திருந்த கண்டக் கோடாரியுடன் சென்றார். 20.09.1942 அன்று அதிகாலை 3 மணிக்கு மந்திரக்கோன் தலைமையில் சென்ற குழு முன்வாசல் நோக்கிச் சென்றது.
வீரர்களின் திட்டம் என்னவென்றால். இராஜகோபால் தலைமையில் சென்ற குழு குடிசை அருகே வந்ததும் மந்திரக்கோன் தலைமையில் சென்ற குழு முன்வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். ஆனால் மந்திரக்கோன் தலைமையில் சென்ற குழுவினர் முன்வாசல் அருகே வந்து சேரும் போது அதிகாலை சரியாக 3 மணி ஆனது. மணி 3 ஆகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காக உப்பளத்தின் காவலாளி வேதமணி மூன்று முறை மணியை அடித்து விட்டு குடிசைக்குள் சென்றார். ஆனால் மந்திரம் தலைமையில் சென்ற குழுவினர் நம்மைப் பார்த்துத்தான் காவலாளி மணி அடித்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு, இராஜகோபால் தலைமையில் சென்ற அணியினர் குடிசை அருகே வந்த பிறகுதான் முன்வாசலை உடைக்க வேண்டுமென்ற தங்கள் திட்டத்தை மறந்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் முன் வாசலை உடைக்கத்தொடங்கி விட்டனர்.
முன்வாசல் உடைக்கப்படும் சத்தம் இராஜகோபால் தலைமையில் வந்த குழுவினரின் காதுகளிலும் விழுந்தது. அதே சமயம் ஏதோ ஒரு கும்பல் கலாட்டா செய்ய வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட காவலாளி வேதமணி என்னவென்று பார்ப்பதற்காக வெளியில் வந்து “யார்? என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். மந்திரம் தலைமையில் வந்தக் குழுவினர் “நாங்கள் காங்கிரஸ்காரர்கள், மெயின் கேட்டைத் திறக்கிறாயா? இல்லை நாங்களே உடைத்துக் கொண்டு உள்ளே வரட்டுமா?” எனக் கேட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது உப்பளத்திற்கு உள்ளே இருந்த ஓலைக் குடிசைக்குள் காவல்காரர்களை மேற்பார்வையிடும் அதிகாரி இராமசாமி தாஸ், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை காவல் வேலை பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியபண்டிதன். தபால் எடுத்து வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்த வேலுக்கோனார் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை காவல் வேலை பார்த்து விட்டுத் தூங்குவதற்காக
குடிசைக்குள் சென்ற பெரியநாயகம் பிள்ளை குடிசைக்குள்ளிருந்த கண்ணாடிப் புட்டிகளைக் கழுவிக் கொண்டிருந்திருக்கிறார்.
மந்திரம் தலைமையில் வந்தக்கும்பல் முன்வாசலில் போட்ட சத்தம், குடிசைக்குள் புட்டிகளைக் கழுவிக் கொண்டிருந்த பெரியநாயகம் பிள்ளையிள் காதுகளில் விழுந்தது. அவர் குடிலுக்கு வெளியே வந்துப் பார்த்தார். கும்பல் வெளியே நின்று முன்வாசலை உடைப்பதையும் உள்ளே நின்று காவலாளி வேதமணி செய்வதறியாது வாக்குவாதம் செய்வதையும் பார்த்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் ஓடிச்சென்று தூங்கிக் கொண்டிருந்த சுப்பிரமணிய பண்டிதனையும், வேலுக்கோளாரையும் எழுப்பியுள்ளார்.
அதற்குள்ளாக கும்பல் முள்வாசல் சுதவை உடைத்து விட்டது இனி நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்ட காவலாளி வேதமணியும் குடிசைக்குள் ஓடிச்சென்று தூங்கிக் கொண்டிருந்த இராமசாமி, தாஸை’ எழுப்பியுள்ளார். அனைவரையும் எழுப்பிக் கொண்டு துப்பாக்கியுடன் வேதமளி குடிசையை விட்டு வெளியே வருவதற்குள் மந்திரம் தலைமையில் வந்தக்குழு முன்வாசலை உடைத்துக் கொண்டு குடிசை அருகே வந்து விட்டது.
இதற்குள்ளாக முள் வேலியைப் பிய்த்துக் கொண்டு இராஜகோபால் தலைமையில் வற்தக் குழு குடிசையை நோக்கிப் பாய்ந்தது. அந்த வேளையில் இராஜகோபால் தலைமையில் வந்த மாடசாமி செட்டி, பால்சாமி, பொன்னுசாமி நாடார். செல்லச் சிவலிங்கம். தங்கராஜ் ஆகியோர் “நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. நமது எண்ணம் துப்பாக்கிகளைக் கொள்ளையடிப்பதுதான்; ஆனால் இங்கே இப்போது உள்ள நிலைமையைப் பார்த்தால் கொலை
நடந்தாலும் நடக்கலாம். எனவே நாம் ஓடிவிடுவோம்” என முடிவெடுத்து ஆளை விட்டால் போதும் என வெளியில் ஓடிவிட்டனர்.
முன்வாசல் வழியாகச் சென்ற குழுவும் முள் வேலியைப் பிய்த்துக் கொண்டு வந்த குழுவும் குடிசை அருகே வரவும் குடிசைக்குள்ளிருந்து வேதமணி துப்பாக்கியுடன் வெளியில் வரவும் சரியாக இருந்தது. அவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் கும்பலை நோக்கிச் சுட்டார். அவருடைய துப்பாக்கியும் குண்டுகளும் மிகவும் பழமையானவை என்ற காரணத்தினால் அவரால் சுட இயலவில்லை. அதற்குள்ளாக முன்வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த குழுவில் இருந்த தர்மம் கோயில்பிள்ளை தன்னிடமுள்ள அரிவாளால் வேதமணியை ஒங்கி வெட்டினார், வேதமணியின் வலதுகாலில் முழங்காலுக்குக் கீழே பலத்த வெட்டு விழுந்தது. அதற்குள் கும்பலாக வந்தவர்கள் வேதமணியைத் துவைத்தெடுத்தனர். சிவந்திக்களி என்ற முத்துநாடார் தான் வைத்திருந்த கயிற்றால் வேதமணியின் கைகளைப் பின்புறமாகக் கட்டி சிறிது தூரம் உருளையை உருட்டுவதுபோல் உருட்டினார்.
வேதநாயகம் தாக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியநாயகம் பிள்ளைத் தடுக்க முற்பட்டார். அவரைக் காசிராஜன் என்ற இராமலிங்க நாடார் தன்னிடமிருந்த கண்டக்கோடாரியால் தலையில் வெட்டிக் கீழே தள்ளினார். அப்போது உணர்ச்சியின் உச்சகட்டத்திற்கே சென்றுவிட்ட நம் இளைஞர்கள் பெரியநாயகம் பிள்ளையைக் கொலை செய்ய முற்பட்டனர். அதற்குள்ளாக ஒருசிலர் “அவரும் நம் சகோதரர்தான் அவரைக் கொன்று விடாதீர்கள்” என்றனர். பின் அவரையும் தர்மம் கோயில்பிள்ளை தன்னிடம் இருந்த கயிற்றால் பின்புறமாகக் கட்டித் தரதரவென இழுத்தார். கும்பலின் செயலால் நிலைகுலைந்து போன இராமசாமிதாஸ் குடிசையை விட்டு வெளியே வந்தார் அவரையும் சேர்த்துக் கட்டிப் போட்டனர். இதைப் போலவே சுப்பிரமணிய பண்டிதர், வேலுக்கோனார் ஆகியோரின் கைகளையும் கட்டிப் போட்டனர். காவல்காரர்கள் அனைவரையும் கட்டிப் போட்ட பின்னர் கும்பலைச் சேர்ந்த நாலைந்து பேர் குடிசைக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு துப்பாக்கி மற்றும் சில பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
குடிசைக்கு அருகே வேதமணியின் துப்பாக்கி கீழே கிடந்தது அதையும் தூக்கிக் கொண்டனர். அப்போது கும்பலைச் சேர்ந்த ஒருவர் தன் கையிலிருந்த பெட்ரோலைக் கூரையின் மீது ஊற்றி தீ வைத்தார். தீ குடிசை மீது வேகமாக பரவியது அதேசமயம் குடிசைக்கு அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த காவலர்கள் கதறினர். இதற்குள்ளாக கும்பலைச் சேர்ந்த பலர் முன்வாசல் வழியாக வெளியே சென்று விட்டனர். கும்பலைச் சேர்ந்த ஒரு சிலர் காவலர்கள் தீயில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என அஞ்சி அவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். காவலர்கள் போட்டச் சத்தம் முன்வாசலிலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 300 அடி தூரம் தள்ளியிருந்த கட்டிடத்தில் (கூரை மட்டும் ஓலை ) தூங்கிக் கொண்டிருந்த வடக்கு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வில்பிரட் லோன்துரை என்ற உப்பளத்தின் உதவி ஆய்வாளரின் காதில் விழுந்தது,
அவர் உடனே எழும்பி சமையல்காரரை அனுப்பி பக்கத்து அறையிலிருந்த காக்கி உடைகளை எடுத்து வரச்சொன்னார். காக்கி அரைக்கால் சட்டையும், மேல்சட்டையும் அணிந்து தனது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டவரைத் தட்டி எழுப்பி தனது அலுவலகத்தைத் திறக்கச் சொல்லி அங்கிருந்த ஒருசில துப்பாக்கியையும், குண்டுகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் தன் பங்களாவிலிருந்த பெரியவேல் நாடாரை அழைத்து “உடனே காவல் நிலையம் சென்று ‘காங்கிரஸ் காரர்கள் உப்பளத்தில் பெரிய கலட்டா செய்கிறார்கள்’ எனப்புகார் கொடு” என்று கூறி அனுப்பினார்.
அதற்குள்ளாக லோன்துரையின் பங்களாக் கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு அதிகாரியான முத்துசாமிப் பிள்ளை எழுந்து லோன்துரை அருகே சென்றார். முத்துசாமி பிள்ளை பின்தொடர லோள்துரை உப்பளத்தின் முன்வாசலை நோக்கி நடந்தார். அப்போது பியூன் சங்கர மூர்த்தியிடமும் ”உடனே காவல் நிலையம் சென்று ‘காங்கிரஸ்காரர்கள் உப்பளத்தைத் தாக்குகிறார்கள்’ எனப் புகார் கொடு” எனக்கூறி அனுப்பிவிட்டு மீண்டும் முத்துசாமிப் பிள்ளை பின்தொடர உப்பளத்தின் முள் வாசலை நோக்கி நடந்தார். அச்சமயம் கும்பலைச் சேர்ந்த பலர் முன்வாசலைக் கடந்து
வெகுதொலைவில் சென்று விட்டனர். ஓருசிலர் முன்வாசல் அருகே நின்று கொண்டிருந்தனர், முன்வாசலில் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் லோன்துரை வருவதைக் கண்டதும் சற்றுத் தள்ளி வடக்குப் பக்கமுள்ள முள்புதருக்குள் மறைந்து கொண்டனர். இராஜகோபால், காசிராஜன், தங்கவேல், மந்திரம் மற்றும் சிலர் உப்பளத்தின் உட்புறமாக முன்வாசலுக்கு நிறுத்தப்பட்ட கல்லின் ஓரமாகப் பதுங்கிக் கொண்டனர்.
(தொடரும்)


