An image of the flag of the Kenya. Series "Africa"
கென்யா குடியரசு என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். நைரோபி இதன் இதன் தலைநகரும் பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கோட்டில் அமைந்துள்ள கென்யாவின் எல்லைகளாக, தெற்கு மற்றும் தென்மேற்கே தன்சானியா, மேற்கே உகாண்டா, வட-மேற்கே தெற்கு சூடான், வடக்கே எத்தியோப்பியா, வட-கிழக்கே சோமாலியா ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 581,309 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை அண்ணளவாக 48 மில்லியன்கள் ஆகும்.


