திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் விரைவில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தட்டார் படம் பகுதியில் முருக பக்தர் பேரவை சார்பில் கந்த சஷ்டி பாராயணம் போடப்பட்டது.
சாத்தான்குளம் வட்டம் முருக பத்தர்கள் பேரவை சார்பில் தட்டார்மடம் மேலத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சிவன் குடியேற்று, அழகப்பபுரம், பிச்சிவிளை, பெருமாள்புரம், கொம்மடிக்கோட்டை, வைரவம், முக்கந்தன்விளை, மோடி நகர், இடைச்சிவிளை, சுப்பிரமணியபுரம், புத்தன்தருவை–கஸ்பா தெரு, உட்பட்ட பகுதிகளில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் விரைவில் தீப ஏற்ற வலியுறுத்தி கந்த சஷ்டி பாராயணம் பாடப்பட்டது .
இதில் அந்தந்த தெருவை சேர்ந்த முருக பக்தர்கள் பேரவை பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி பாடினர். இதில், இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்தர், சாத்தான்குளம் ஒன்றிய பொதுச்செயலாளர் மாயவன முத்து சாமி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கட கிருஷ்ணன், மாரிமுத்து, ஒன்றிய துணைத்தலைவர் சித்திரை செல்வன், ஒன்றிய தலைவர் மணி, கஸ்பா தெரு கிளைத்தலைவர் முத்துக்குமார், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் ராமக்கனி, கீதா, தமிழரசி உட்பட 150-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.


