கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மினி வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து புது கிராமத்திற்கு செல்லும் பாலம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராஜ் தலைமையில் காவலர் முத்துராமலிங்கம், முத்துமாரி, ரமேஷ் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலம் அருகில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ரவிக்குமார் (49), எட்டயபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த மரியமிக்கேல் மகன் யாகப்பராஜ் (34) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், சோழபுரத்தில் இருந்து மினி வேன் மூலம் புகையிலை பொருட்களை கோவில்பட்டிக்கு கொண்டு வந்து, மோட்டார் சைக்கிள் மூலம் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள 6 மூட்டை புகையிலை பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்திய


