தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தீராத்திக்குளத்தில் கள்ளவாண்டசுவாமி கோவில் கொடை விழா நடந்தது.
இந்த கள்ளவாண்ட சுவாமி கோயில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மட்டுமே உள்ளது. இந்த கோவிலில் வேட்டைப்பானை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெறும்.
தீராத்திக்குளம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மதியம் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் இரவு 12 மணிக்கு அலங்கார பூஜை நடந்து சுவாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் கோவில் முன்பு ஊர் மக்கள் சார்பில் 2 அடி உயரம் கொண்ட 11 மண்பானையில் பச்சை அரிசியில் வேட்டை பானை பொங்கல் வைக்கப்பட்டது.
பின்னர் வேட்டைக்கு சென்ற சுவாமி கோவிலுக்கு வந்து பொங்கல் இடப்பட்டிருந்த 11 வேட்டைப்பானையில் தென்னை பூ வைத்து பானையில் உள்ள சோற்றை தலையில் ஆவி பறக்க வைத்து ஆடினார். இதனை கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் பார்த்தனர். அதன் பக்தர்களுககு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வசிக்கும் உள்ளுர் மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு கழித்தனர். பின்னர் படப்பு பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


