தூத்துக்குடி புத்தக கண்காட்சி எட்டயபுரம் சாலை சங்கரபேரி சாலைப்பிரிவில் கடந்த ஏப்ரல் 21 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 24 ந்தேதி மலை 6 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி என்ற தலைப்பில் நான்(முத்தாலங்குறிச்சி காமராசு) பேசினேன். என்னோடு புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் இரா . நாறும்பூ நாதரும், பட்டினப்பாலையும் தமிழர் வாழ்வியலும் என்ற தலைப்பில் நெய்தல் யூ அண்டோ ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியினை மிகச்சிறப்பாக மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. அதற்காக நான் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்களுக்கு நன்றியை கூறுகிறேன். ஏன் என்றால் இந்த ஆண்டு பேச்சாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்புகளை செய்திருந்தார்கள். எழுத்தாளர்கள் எழுதிய நூலோடு எங்களது புகைப்படத்தியும் விளம்பர பாதகையாக மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் மற்றும் புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில் வைத்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் பேச்சாளர்களை கௌவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சி தலைவர், வணக்கத்துக்குரிய மேயர், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர், சப் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்பட அலுவலர்கள் மேடைக்கு வந்து எங்களை கௌரவப்படுத்தினர். அதோடு மட்டுமல்லாமல் அருமையான காந்தியடிகளின் வெண்கல சிலையையும், பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் புகைப்படத்தினை எடுத்து அதை உடனே பிரேம் செய்து நினைவு பரிசையும் கொடுத்து கௌரவித்தனர். அந்த அதிரடி நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மூத்த எழுத்தாளர் கலாபான் வாஸ் அவர்களை ஆட்சி தலைவர் மேடையை விட்டு கீழே இறங்கி, அவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிகச் சிறப்பாக இருந்தது. எழுத்தாளர்களை கௌரவிக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நல்லபேச்சாளர்களை கொண்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். -அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு






