தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பி.என்.டி. காலனி நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அவரது சமாதியில் சைவ வேளாளர் சங்கம் மற்றும் நற்பணி மன்றத்தினர் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகத்தின் அடையாளமாகத் திகழும் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி டி.எம்.பி. காலனி ரோட்டில் உள்ள அவரது சமாதிக்கு அருகில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் சிறப்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் டி.ஏ. தெய்வநாயகம், செயலாளர் மீனாட்சிநாதன், பொருளாளர் சிவராமகிருஷ்ணன், நிர்வாகச் செயலாளர் கந்தசாமி, சங்க வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பாஸ்கர் மற்றும் வ.உ.சி. நற்பணி மன்றத் தலைவர் குற்றாலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நற்பணி மன்ற நிர்வாகிகள் செந்தில், வீரபாகு, செந்தில் ஆறுமுகம், சொக்கலிங்கம், முன்னாள் துணை ஆட்சியர் இளங்கோ, ஷிப்பிங் கம்பெனி அதிபர் ரமேஷ் மாதவன், வ.உ.சி. துறைமுகப் பிரதிநிதி முருகேசன், அனல் மின் நிலையப் பிரதிநிதி ஆறுமுகம், கிட்டு என்ற சிவராமகிருஷ்ணன், வழக்கறிஞர் சங்கரலிங்கம், முருகையா மற்றும் பல முக்கிய நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். அனைவரும் வ.உ.சி. சமாதியில் மலர்களைத் தூவி வீரவணக்கம் செலுத்தி, தேசப்பற்று நலனுக்கான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்


