திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன் பட்டணம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தில் வைத்து நான்காவது புத்தக திருவிழா தொடர்பான விழிப்புணர்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் கு.கதிரேசன் புத்தகம் வாசிப்பு மகிமை குறித்து சிறப்புரையாற்றினார் .திருச்செந்தூர் செந்தில் குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் செல்வி .அனுமீரா அவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் .,காவல் துறை துணை கண்காணிப்பாளர் , திருச்செந்தூர் வட்டாட்சியர் , கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ,திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ,அனைத்து துறை அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருச்செந்தூர் நூலகத்துறை உள்ளிட்ட பல அரசு துறைகளின் மூலம் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



