தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாள் இன்று (நவம்பர் 18) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்துப் புகழ்வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், பிரமிளா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, கண்ணன், அருணாதேவி, மாவட்டப் பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், மாவட்ட அணித் தலைவர்கள் பழனி, அருண்குமார், பகுதிச் செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சாரதி, துணை அமைப்பாளர்கள் வினோத் நைஸ்பரமசிவம், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத், துணை அமைப்பாளர் சத்யா, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், தெய்வேந்திரன், ஜெயசீலி, கந்தசாமி, வைதேகி, பவானி, மரியகீதா, ரெக்ஸ்லின் உள்பட பலர் பங்கேற்றனர்.


