நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதியை தூர் வாறும் பணிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது.
பணியின் நான்காம் நாளான இன்று பாபநாசத்தில் ஆற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட ( பக்தர்கள் நீரில் போட்டு விட்ட) ஆடைகள்.
பாபநாசம் ஆற்றில் தர்ப்பணம் செய்ய வருவோர் மற்றும் வேண்டுதலுக்காக இவ்வாறு ஆடைகளை ஆற்று நீரில் இடுவது பாவகரமான செயல் என்று ஆன்மீகப் பெரியோர்கள் சொன்னாலும் யாரும் கேட்பதில்லை.
பாபநாசம் கோயிலைச் சுற்றி உள்ள தர்ப்பணம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வேத விற்பன்னர்கள் சிலர் சொல்லும் தவறான யோசனையால் தான் இப்படி பக்தர்கள் மூடநம்பிக்கையுடன் உடைகளை ஆற்றில் வீசுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கோவிலை சுற்றி உள்ள வேத விற்பனர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்.


