தூத்துக்குடி செபத்தையாபுரத்தில் உள்ள இருவப்புரம் சாலை அருகே பகுதிநேர நியாய விலை கடையை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் திறந்து வைத்தார்.
0.706 செபத்தையாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் இருவப்புரம் சாலை அருகே பகுதிநேர நியாய விலை கடை திறக்கப்பட்டது.
இதனை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஊர்வசி எஸ். அமிர்தராஜ் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் செபத்தையாபுரம் ஊர் பொதுமக்கள், காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.