இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார்.
வட்டார சமூகநலத் துறை அலுவலர் பாக்கியலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கருங்குளம் வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.50,000 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்களுக்கு ரூ.25,000 உதவி தொகையை ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
பின்னர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழக முதல்வர் கொரோனா காலகட்டத்தில் கூட மக்களுக்கு அந்தந்த நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடையவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.
முழுக்க முழுக்க மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே தாலிக்கு தங்கம் போன்ற நிறைய எண்ணற்ற திட்டங்கள் இருக்கிறது. திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருங்குளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூங்கன் ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோதண்டராமன். காங்கிரஸ் எடிசன் உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.