திருச்செந்தூர் கோவில் குறித்து வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கழிவறை தரமானதாக கட்டப்படவில்லை என்றும், பல பொருட்கள் திருடுபோய் விட்டதாகவும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் பிரிதிவ் ராஜ் என்பவர் வீடிேயா வெளியிட்டார்.
இதையடுத்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் அவரை இன்று காலை கைது செய்துள்ளனர். முன்னதாக இன்று அதிகாலையிலேயே அவரை போலீசார் வீட்டிற்கு சென்றபோது குடும்பத்தினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


