தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் பணியினை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
கோடை காலத்தை முன்னிட்டு வெப்ப தாக்குதல் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல இடங்களில் உப்பு சர்க்கரை கரைசல் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் கடுமையான வெப்பத்தின் காரணமாக வைரஸ் போன்ற நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.
இப்பணிகளை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். இதில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


