சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து தூத்துக்குடி மாணவி சாதனை படைத்துள்ளார்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வில், தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் வி.ஜி.பி. பன்னீா்புரத்தில் செயல்பட்டு வரும் கிங் ஆப் கிங்ஸ் சீனியா் செகரண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி செல்வலட்சுமி தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தாா்.
இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவி செல்வலட்சுமியை பள்ளித் தாளாளா் சி. கிங்ஸ்டன் பால்மாணிக்கம், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வா் ஈ. ஜூலியா, தமிழாசிரியை ஜேஸ்மின் ஆகியோா் பாராட்டினா். இதுகுறித்து, மாணவி செல்வலட்சுமி கூறுகையில், எனது தந்தை முத்துமாரியப்பன், தாய் ராமலட்சுமி, ஆசிரியா்கள் அளித்த ஊக்கத்தால்தான் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற முடிந்தது என்றாா்.


