தூத்துக்குடியில் 2 புதிய பேருந்து சேவையை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மில்லர்புரம், ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம், புதுக்கோட்டை வழியாக குலையன்கரிசல் கிராமத்திற்கும் கோவில்பட்டியில் இருந்து நாலாட்டின்புதூர் கழுகுமலை குருவிகுளம் வழியாக அத்திப்பட்டி கிராமத்திற்கும் புதிய மகளிர் விடியல் பேருந்துகள் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். விழாவில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார். அப்போது கண்டக்டர் கட்டணமில்லா இலவச டிக்கெட் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி கிளை மேலாளர் ரமேஷ் கார்த்திக், மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா தேவி, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சுரேஷ், திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கருப்பசாமி, லிங்கசாமி, மகேந்திர வேல், ராஜேந்திரன், சரவணன், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ஜெயசீலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


