தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பள்ளிவாசல் தெரு,, முஸ்லிம் புதுத்தெரு, வசவப்பபுரம் ரோடு கடைவீதி
உள்பட இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 300நபர்கள் பயன்பெற்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சீதோஷ்ண மாற்றம் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் விஷ காய்ச்சலால் அவதியுற்று வருகின்றனர். எனவே தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் நிலவேம்பு கசாயத்தினை இலவசமாக வழங்கி வருகிறது.


