ஆறாம் பண்ணை ஊராட்சியில் தொடர்ந்து ஏற்படும் மின்சார தடையை நீக்கும் வகையில் பல் வேறு பணிகளை பஞ்சாயத்து நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக ஆறாம்பண்ணை வடக்குத்தெரு சிந்தா தர்கா முன்பு புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மின்வாரியத்தினை எடுத்து தற்போது புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இது குறித்து ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் கூறும் போது, தொடர்ந்து ஏற்படும் மின் தடை மற்றும் குறைபாடுகளை போக்க மின் வாரியத்தில் மனுக்களை கொடுத்துக்கொண்டிருந்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று தற்போது மின்வாரியத்தினை புதிய டிரான்ஸ்பார்மரை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டுக்கு வந்து விடும்.இதற்கான உழைத்த அனைத்து மின்சார அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. என அவர் கூறினார்.


