தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட இளைஞர்க்ள தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சமத்துவ மக்கள் ரத்ததான கழகத்தைச் சேர்ந்த ஸ்பாட் இம்மானுவேல் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து தங்களை அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. அபிசேக் பொன்சீலன் மற்றும் தவெக மாவட்டச் செயலாளர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய உறுப்பினர்களாக இணைந்த இளைஞர்களைக் கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இவ்விழாவில் கட்சி முக்கிய நிர்வாக்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


