தூத்துக்குடி மாநகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மேற்குப் பகுதி செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலையில், மத்திய மாவட்டம் 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீராம் T. ராமர் ஏற்பாட்டின்படி இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

இதில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக வேஷ்டி, சேலைகள், இனிப்புகள் மற்றும் தீபாவளிக்கான சிறப்புத் தொகை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மேற்குப் பகுதி இணைச் செயலாளர் மந்திரகுமார், ராஜா பிரதீப், மேற்குப் பகுதி மாணவரணி அமைப்பாளர் ராம்ஜி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.