ரோட்டரி மாவட்டம் 3212 சார்பில் அறுவடை எனும் தலைப்பில் தூத்துக்குடியில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் கோவில்பட்டி ரோட்டரி சங்கத்திற்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்கங்களின் சமூகச் சேவைகளைப் பாராட்டி, ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு தலைப்புகளின்கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான விருது வழங்கும் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
விழாவிற்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி, அவார்ட்ஸ் மாவட்ட செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளைக் கவனித்த அவார்ட்ஸ் விழா சேர்மன் பின்டோ வில்வராயர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் பாஸ்கரன், கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சிறந்த சேவை மற்றும் செயல்பாடுகளைப் பாராட்டி, அதற்கான சிறந்த சங்க விருது மற்றும் சான்றிதழ்களைக் கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமாரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பழனி குமார், முத்து செல்வம், விநாயகா ரமேஷ், ரமேஷ் குமார், சீனிவாசன், தாமோதர கண்ணன், நாராயணசாமி, முத்துமுருகன், ரவிமாணிக்கம், கிருஷ்ணசாமி, மாரியப்பன், ரத்தின குமார், அருண், காளியப்பன் உட்பட ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக, அவார்ட்ஸ் விழா செயலாளர் மகாலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்.


