1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு கியூபாவில் தரையிறங்கியது.
1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ், மேரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.
1918 – அமெரிக்காவின் இந்தியானாவில் தொடருந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். 127 பேர் வரை காயமடைந்தனர்.
1921 – எசுப்பானிய இராணுவம் எசுப்பானிய மொரோக்கோவின் ரிப் மலைத்தொடர் பகுதியில் நடந்த போரில் பேர்பர்களிடம் பெரும் தோல்வி கண்டது.
1930 – ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு செருமனியுடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனி சோவியத் ஒன்றியத்தை ஊடுருவியது.
1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் கைப்பற்றப்பட்டதை அடுத்து, இர்வின் ரோமெல் படைத்துறை உயர்தர தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
1948 – 802 மேற்கிந்தியக் குடியேறிகள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.
1957 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஆர்-12 ரக ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.
2002 – ஈரானின் வடமேற்கே 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 261 பேர் உயிரிழந்தனர்.
2009 – வாசிங்டனில் இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.


