
தூத்துக்குடியில் கழிவு நீர் விவகாரத்தில் என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரியை போலீசார் கைது செய்தனர்இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் காளியப்பன் (46). என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில வசிப்பவர் பாண்டி மகன் ஜெயக்குமார் (42) பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரது வீடும் அடுத்தடுத்து அமைந்துள்ளது.
இதில் ஜெயக்குமார் வீட்டு கழிவுநீர் காளியப்பன் வீட்டு காம்பவுன்ட் சுவர் வழியாக சென்றுள்ளது. இதனை சரி செய்யுமாறு காளியப்பன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், காளியப்பனின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்தைகளால் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.